செப்டம்பர் மாதம் ரஃபேல் ஊழலை பற்றி விளக்கம் தர காங்கிரஸ் கட்சி சார்பாக செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. அந்த சந்திப்பை தலைமை தாங்கி நடத்திய காங்கிரஸ் கட்சியின் செய்திதொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதியிடம் அக்கட்சி தொண்டர்கள் தவறாக நடந்து கொண்டனர். இதையடுத்து அவர்களை காங்கிரஸ் கட்சி உடனடியாக நீக்கியது.
பிரியங்கா சதுர்வேதி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல் - விலகல்
டெல்லி: பிரியங்கா சதுர்வேதியிடம் தவறாக நடந்து கொண்ட காங்கிரஸ் தொண்டர்களை மீண்டும் அக்கட்சி இணைத்துக்கொண்டதால் அவர் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
பிரியங்கா சதுர்வேதி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
பிறகு, மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நீக்கப்பட்ட தொண்டர்களை காங்கிரஸ் கட்சி மீண்டும் சேர்த்து கொண்டது. இதனை கடுமையாக விமர்சனம் செய்து சதுர்வேதி ட்விட் செய்தார். இதனைத் தொடர்ந்து இன்று அக்கட்சியில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தார். மேலும் அவர் சிவசேனா கட்சியில் அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே முன்னிலையில் இணைந்துள்ளார்.