மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கேரளாவில் பாஜகவினர் கடும் பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர். அங்கு பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட்ட மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளரை சந்தித்தார்.
ராகுலுக்கு தோல்வி பயம் - பியூஷ் கோயல் - தோல்வி
திருவனந்தபுரம்: அமேதி தொகுதியுடன் வயநாடு தொகுதியிலும் ராகுல் போட்டியிடுவதற்கு அவரின் தோல்வி பயம்தான் காரணம் என பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
அப்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவர் கடுமையாக விமர்சித்தார். அவர் கூறியதாவது, "ராகுல் தோல்வி பயத்தால்தான் அமேதி தொகுதியிலிருந்து வயநாடு தொகுதிக்குச் சென்றார். அவர் நாட்டு மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார். கேரள மக்கள் அவரை தோல்வி அடையச்செய்வார்கள். எனவே, அடுத்தத் தேர்தலில் அவர் வேறொரு நாட்டில்தான் போட்டியிடுவார்" என்றார்.
ராகுல் காந்தி கேரளாவிலும் போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி அறிவித்ததிலிருந்து பாஜக தலைவர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் கோயலும் இக்கருத்தை தெரிவித்துள்ளார்.