எதிர்கட்சிகள் சார்பாக டெல்லியில் 'ஜனநாயகம் காப்போம்' என்ற மாநாட்டின் முடிவில் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபல், காங்கிரஸ் கட்சியின் செய்திதொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் பங்குபெற்றனர்.
ஒரு கட்சிக்கு வாக்களித்தால், மற்றொரு கட்சிக்கு வாக்கு செல்கிறது - காங்கிரஸ் குற்றாசாட்டு - காங்கிரஸ்
டெல்லி: ஒரு கட்சிக்கு வாக்களித்தால், மற்றொரு கட்சிக்கு வாக்கு செல்வதாக காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி டெல்லியின் நடந்த நிகழ்ச்சியில் கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் பேசிய மனு சிங்வி, முதல் கட்டத் தேர்தலுக்கு பிறகு தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை குறித்து பல தரப்பிலுருந்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், அதன் சார்பில் போதுமான பதில் அளிக்கபடவில்லை. தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒரு கட்சிக்கு வாக்களித்தால் மற்றொரு கட்சிக்கு வாக்கு செல்வதாக குற்றம் சாட்டப்படுகிறது. வாக்கு இயந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்வதற்கான ஒளி 7 வினாடிகளுக்கு பதிலாக 3 வினாடிகள் மட்டுமே எரிகிறது என்றார்.
இதில் கலந்து கொண்ட சந்திரபாபு நாயுடு கூறியதாவது, தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு கீழ் செயல்படுகிறது. நடுநிலையாக செயல்பட வேண்டிய தன்னாட்சி நிறுவனமான இது அப்படி செயல்படவில்லை. மேலும், வாக்குப்பதிவு இயந்திரம் தவறாக கையாளப்படுகிறது. எனவேதான், 50 விழுக்காடு வாக்கு ஒப்புதல் இயந்திரம் மூலம் சரிப்பார்க்க கோரிக்கை விடுத்தேன். ஆனால், அதை தேர்தல் ஆணையம் ஒத்துக்கொள்ளவில்லை என்றார்.