மேற்கு வங்கத்தில் திருணமுல் காங்கிரஸ் கட்சிக்கு பரப்புரை செய்து வந்த மாநிலங்களவை உறுப்பினரும், அக்கட்சியின் மூத்தத் தலைவருமான டெரிக் ஓ பிரையன் செய்தியாளரகளை சந்தித்தார்.
பாஜகவினரை கேலி செய்த டெரிக் ஓ பிரையன் - கேலி செய்த
கொல்கத்தா: மேற்கு வங்கதத்தில் இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை கூட பாஜகவினருக்கு தெரியாது என திருணமுல் காங்கிரஸ் மூத்தத் தலைவர் டெரிக் ஓ பிரையன் கேலி செய்துள்ளார்.
அப்போது, பாஜக கட்சியை கேலி செய்து விமர்சித்துப் பேசினார். மேற்குவங்கத்தில் பாஜக 30 தொகுதிகளில் வெல்லும் என அக்கட்சியினர் சொல்லி வருவதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, பாஜவினர் மேற்கு வங்கத்தில் 42 தொகுதிகளில் 50 தொகுதிகளையும் வெல்வோம் என்று கூடதான் பேசிவருகின்றனர். அர்களுக்கு இங்கு இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை கூட தெரியவில்லை என விமர்சனம் செய்தார்.
பாஜகவினர் கனவு காண்கின்றனர், இம்மாநில மக்கள் மம்தாவுடன் இருக்கிறார்கள் எனக் கூறிய அவர், தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் மே 23ஆம் தேதி அவர்கள் எங்கு மறைந்துகொள்வார்கள் என தனக்குத் தெரியவில்லை என தெரிவித்தார்.