இடதுசாரி எழுத்தாளரும், நடிகர் பிரகாஷ்ராஜின் நெருங்கிய தோழியுமான கௌரி லங்கேஷ் 2017ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இவரின் மறைவுக்குப் பிறகு பிரகாஷ் ராஜ், மத்திய பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்துக் கருத்துகளை வெளியிட்டு வந்தார்.
யாரையும் எதிர்க்கவில்லை; மக்களுக்காகப் போட்டியிடுகிறேன் - பிரகாஷ் ராஜ் - CENTRAL BENGALURU
பெங்களூரு: யாரை எதிர்த்தும் போட்டியிடவில்லை, மக்களுக்காக போட்டியிடுகிறேன் என மத்திய பெங்களூரு தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு மதவாதத்தை எதிர்த்து மத்திய பெங்களூரு தொகுதியில் போட்டியிடப்போவதாகவும் பிரகாஷ் ராஜ் அறிவித்தார். அவர் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், சுயேச்சையாக களமிறங்குவதாக தன் ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டார்.
பரப்புரையின்போது செய்தியாளர்களைச் சந்தித்து பிரகாஷ் ராஜ், "நான் யாருக்கு எதிராகவும் போட்டியிடவில்லை; மக்களுக்காகப் போட்டியிடுகிறேன். ஜனநாயகத்தில் சரியான தலைவரை தேர்ந்தெடுத்தால்தான் மக்கள் வெற்றிபெற்றதாகக் கருதப்படுவார்கள்" என்றார்.