சமீபத்தில் பாஜகவில் இணைந்த கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் மோடிக்கு ஆதரவாக பரப்புரை செய்து வருகிறார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அவர், முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் மெஹபூபா முஃப்தியை விமர்சித்து பேசினார்.
மோடி சுனாமி வீசுகிறது - கம்பீர் - slams
டெல்லி: மக்களவைத் தேர்தலில் மோடிக்கு ஆதரவான சுனாமி அலை வீசுவதாக பாஜகவில் சமீபத்தில் இணைந்த கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
மோடி சுனாமி வீசுகிறது - கம்பீர்
இதுபற்றி அவர் கூறுகையில், மோடிக்கு ஆதரவாக உள்ள தன்னை தடுக்கலாம். ஆனால், 130 கோடி இந்தியர்களை அவரால் தடுக்க முடியாது என்றார். மேலும், 2014ஆம் ஆண்டு நடந்தத் தேர்தலில் மோடி அலைதான் வீசியது என்றும், தற்போது பிரதமருக்கு ஆதரவாக சுனாமி வீசி வருவதாகக் கூறினார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் வளர்ச்சியின் பாதையில் மோடி இட்டுச் சென்றதாகவும் கம்பீர் பெருமிதம் கொண்டார்.