முன்னாள் பிரதமர் தேவ கவுடாவை நேற்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பெங்களூருவில் உள்ள அவர் வீட்டில் சந்தித்தார். இந்த சந்திப்பில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும், கர்நாடகா முதலமைச்சருமான குமாரசாமியும் உடன் இருந்தார். இந்த சந்திப்புக்கு பிறகு சந்திர பாபு நாயுடு, தேவகவுகா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்
ராகுல் பிரதமராக சந்திர பாபு நாயுடு ஆதரவு? - சந்திர பாபு நாயுடு சந்திப்பு
பெங்களூரு: ராகுல் காந்தி பிரதமர் ஆவதில் தவறில்லை என சந்திர பாபு நாயுடு தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
chandra babu naidu
ராகுலை பிரதமர் பதவிக்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் முன்மொழிகிறதே என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, இதில் தவறு என்ன இருக்கிறது, மக்களவைத் தேர்தல் முடிவுகள் வந்த பிறகு அனைவரும் கூடி இதில் ஒரு முடிவு எடுப்போம் என பதிலளித்தார்.
செய்தியாளர் சந்திப்பில் தேவ கவுடா, மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் வரை கூட்டணி குறித்து எதுவும் பேச மாட்டோம் என தெரிவித்தார்.