பஞ்சாப் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர் சாம்சர்சிங் டுலோ. இவர் அந்த கட்சியில் எம்பியாகவும் உள்ளார். இவரது மனைவி ஹர்பான்ஸ் கவுர் (65). இவர் கடந்த 2002ஆம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கானா தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார்.
காங்கிரஸ் எம்பி-யின் மனைவி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் - ஆம் ஆத்மியில் இணைந்தார்
டெல்லி: பஞ்சாப் மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்பியுமான சாம்சர்சிங் டுலோவின் மனைவி ஆம் ஆத்மியில் இணைந்துள்ளது அம்மாநில அரசியலில் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என காத்திருந்தார். ஆனால் அவருக்கு சீட் வழங்காததால், விரக்தியடைந்த அவர் ஆம் ஆத்மி கட்சி ஜலந்தர் மாவட்ட தலைவர் அமன் ஆரோ தலைமையில் இணைந்தார்.
பின்னர் இதுகுறித்து அவர் கூறியதாவது, தற்போது மாநிலத்தில் அமிர்ந்தர் சிங் தலைமையில் நடைபெறும் ஆட்சியில் மக்களுக்கு எந்த நலத்திட்டங்களும் செய்து கொடுக்கவில்லை. மக்களின் வரிப்பணம் தேவையில்லாத திட்டங்களுக்கு வீணடிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். ஆம் ஆத்மியில் இணைந்த அவருக்கு ஃபதேஹ்கர் சாஹிப் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.