மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பாஜகவை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார். அவர் போட்டியிடும் அமேதி தொகுதியில் பிரம்மாண்ட பொது கூட்டத்தில் பேசிய அவர் காங்கிரஸ் கட்சியை விமர்சித்தார்.
காங்கிரஸ் அனைத்து இடங்களிலும் போட்டியிடாதது அதன் தோல்வி பயத்தை காட்டுகிறது - ஸ்மிருதி இரானி - தோல்வி பயத்தை
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் அனைத்து இடங்களிலும் போட்டியிடாதது அதன் தோல்வி பயத்தை காட்டுகிறது என உத்தரப்பிரதேசத்தில் நடந்த பரப்புரையில் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, உத்தரப்பிரதேச மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அனைத்து இடங்களிலும் போட்டியிடாதது தேர்தல் நடக்கும் முன்பே அதன் தோல்வியை ஒத்துக்கொண்டதாக காட்டுகிறது. 80 தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேசத்தில் 20 இடங்களில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது அதற்கு மாநிலத்தில் தொண்டர் பலம் இல்லை என்பதையே குறிக்கிறது. பின், எதற்காக அக்கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். பாஜகவுக்கு வாக்களியுங்கள்.
மேலும், 15 வருடமாக அமேதி தொகுதியின் உறுப்பினர் ராகுல் காந்தி இந்த தொகுதிக்கே வரவில்லை, மக்களவையிலும் தொகுதிக்காக பேசியதில்லை. வேட்புமனு தாக்கல் செய்வதற்கும், தேர்தல் பரப்புரை செய்வதற்கு மட்டுமே தொகுதிக்கு வந்துள்ளார். எனவே, அமேதி தொகுதியில் நான் வெற்றிபெற்றால் இந்த பகுதிக்கு வந்து தொகுதி மக்களின் தேவையை தீர்த்து வைப்பேன் என்றார்.