தெலங்கானாவில் உள்ள ஷான்ஷாபாத் பகுதியில் பாஜக பரப்புரையில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா பேசுகையில், "புல்வாமாவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை பாதுகாப்புப்படையினர் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தான் மீது இந்தியா மீண்டும் ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நடத்தும் என்ற அச்சத்தின் காரணமாக எல்லைகளில் அவர்கள் படையினரை திரட்டியுள்ளனர்.
ஆனால் மோடி தலைமையிலான பாஜக அரசு பாலகோட்டில் உள்ள பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளின் நிலைகள் மீது வான்வழித் தாக்குதல் நிகழ்த்தி உரிய பதிலடி தந்தது.
பாகிஸ்தான் மீதான இந்தத் தாக்குதலை நாடே கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில், இதற்கு இரண்டு பேர் மட்டும் கண்ணீர் வடித்தனர். ஒன்று பாகிஸ்தான், மற்றொன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
இந்திய பாதுகாப்புப்படை வீரர்களை கொல்லும் நாடுகளுடன் நாங்கள் அமைதி பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இல்லை" என திட்டவட்டமாக தெரிவித்தார்.