தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / elections

தேர்தல் முடிந்த பிறகுதான் தேர்தல் அறிக்கை வருமா? பாஜகவிற்கு அகிலேஷ் கேள்வி

லக்னோ: தேர்தல் முடிந்த பிறகுதான் தேர்தல் அறிக்கையை வெளியிடுவீர்களா? என பாஜகவிற்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் முடிந்த பிறகு தான் தேர்தல் அறிக்கை வருமா? -பாஜகவிற்கு அகிலேஷ் யாதவ் கேள்வி!

By

Published : Apr 5, 2019, 11:17 AM IST

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் வேலைகளில் அனைத்துக் கட்சிகளும் மும்முரமாகியுள்ளன.

இந்நிலையில் தேசிய கட்சியான பாஜக இதுவரை தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை. இது குறித்து அனைத்து எதிர்க்கட்சிகளும் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

தற்போது சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் பாஜகவிடம் கேள்வி எழுப்பி, அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘தேர்தல் அறிக்கை வெளியிடும் அந்த நல்ல நாள், தேர்தல் முடிந்தாவது வருமா? முந்தையத் தேர்தலில் நல்ல நாள் வரும் என்று மக்களை ஏமாற்றியது போல் இந்த தேர்தலில் ஏமாற்ற முடியாத அளவுக்கு பாஜக தொண்டர்கள் தள்ளப்பட்டுள்ளனர்’ என்று அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details