உத்தரப்பிரதேச மாநிலம் அசாம்கர் தொகுதியில் சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி சார்பாக அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவ் போட்டியிடுகிறார். அதற்கான வேட்புமனுவை இன்று ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சூழ பரப்புரையில் ஈடுபட்டு அவர் தாக்கல் செய்தார்.
அகிலேஷ் யாதவ் வேட்புமனு தாக்கல் - files
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அசாம்கர் தொகுதியில் போட்டியிடும் அகிலேஷ் யாதவ் வேட்புமனுதாக்கல் செய்துள்ளார்.
2014ஆம் ஆண்டு நடந்தத் தேர்தலில் அகிலேஷ் யாதவின் தந்தை முலாயம் சிங் யாதவ் இங்கு போட்டியிட்டு 35 விழுக்காடு வாக்கு பெற்று வெற்றி அடைந்தார். இந்தத் தொகுதியில் காங்கிரஸ் ஆறு முறையும், பகுஜன் சமாஜ் கட்சி நான்கு முறையும் வெற்றிபெற்றுள்ளன.
இந்த முறை பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து சமாஜ்வாதி போட்டியிடுவதால் அகிலேஷ் யாதவின் வெற்றி உறுதிபடுத்தப்பட்ட ஒன்றாகவே கருதப்படுகிறது. காங்கிரஸ் கட்சியும் இந்தத் தொகுதியில் வேட்பாளரை நிறுத்தபோவதில்லை என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.