திருவள்ளூர் அருகே ஆயிரத்து 381 கிலோ தங்கம் பறிமுதல் - தங்கம் பறிமுதல்
2019-04-17 19:13:29
திருவள்ளூர்: உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ஆயிரத்து 381 கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
ஆவடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் இன்று தீவிர சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த வாகனங்களில் உரிய ஆவணங்கள் இன்றி ஆயிரத்து 381 கிலோ தங்கம் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், இது குறித்து தேர்தல் பறக்கும் படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் திருப்பதி கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.