சென்னை: சேப்பாகம் தொகுதி திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் அரசியல் கட்சிகளின் மூத்தத் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
சேப்பாக்கம் தொகுதியில் யார் போட்டியிட்டாலும் அவரை வெற்றி பெறச் செய்வதே என் இலக்கு என்றும், தனக்கு வாய்ப்பளித்தால் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
தாத்தா சமாதி முதல் அரசியல் தலைவர்கள் வரை இந்நிலையில் முதல் முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு உதயநிதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
வாழ்த்து பெற்று வரும் இளம் தலைவர்! இதுதொடர்பாக தனது ட்விட்டர் பதிவில், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணிக்கட்சி தலைவர்களான மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், விசிக தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோரை சந்தித்து வாழ்த்துப் பெற்றேன்” என்று கூறியுள்ளார்.