தமிழ்நாடு

tamil nadu

'ஓட்டுப்போட வாங்க நீங்க' - தேர்தல் விழிப்புணர்வுப் பாடல் வெளியீடு!

By

Published : Apr 1, 2021, 8:29 AM IST

Updated : Apr 1, 2021, 9:39 AM IST

'ஓட்டுப்போட வாங்க நீங்க' என்னும் வாக்குப்பதிவை ஊக்குவிக்கும்விதமான விழிப்புணர்வுப் பாடலை ராணிப்பேட்டை காவல் துறை வெளியிட்டுள்ளது.

poll awareness song by ranipet police
poll awareness song by ranipet police

ராணிப்பேட்டை: வாக்குப்பதிவை 100 விழுக்காடு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.

இதன் ஒரு பகுதியாக ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை புதிய முயற்சியாக 'ஓட்டுப்போட வாங்க நீங்க' என்று ஆரம்பமாகும் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க தகவல் என்னவென்றால், இந்தப் பாடலுக்கான வரிகளை ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் எழுதியுள்ளார்.

சமீபத்தில் ராணிப்பேட்டையின் காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்ற இவர் கவிதை, கதை எழுதுவதில் மிகுந்த ஆர்வம்கொண்டவர். இவர் பல்வேறு கவிதை தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்.

தேர்தல் விழிப்புணர்வு பாடல்

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் குறித்து இவர் எழுதிய கவிதை பேய்க்கரும்பில் உள்ள அப்துல் கலாம் நினைவிடத்தில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Apr 1, 2021, 9:39 AM IST

ABOUT THE AUTHOR

...view details