கோவை தெற்குத்தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், இன்று(ஏப்ரல் 03) காலை சுக்கிரவார்பேட்டைப் பகுதியில் வியாபாரிகளை சந்தித்து ஆதரவு திரட்டிய கமல்ஹாசன் கோவை ரயில் நிலையத்தில், ஆட்டோ ஓட்டுநர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினார்.
இதைத்தொடர்ந்து, ரயில் நிலையத்தில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளன என்பது குறித்து கேட்டறிந்தார். முன்னதாக, லங்கா கார்னர் பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலப் பிரச்சினை குறித்து அங்குள்ளவர்களிடம் கேட்டறிந்த அவர், தான் வெற்றி பெற்றால், இங்கு உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க முக்கியத்துவம் அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் இதையும் படிங்க: 'நீ ஜெய்ச்சுருவ'- திமுக வேட்பாளரின் தலையில் திருநீறு அடித்த பூசாரி