தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / elections

உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ.2.80 லட்சம் பறிமுதல்! - tamilnadu election news

மதுரை மகபூப்பாளையத்தில் சரக்கு வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ.2,80,000 தேர்தல் கண்காணிப்புக் குழுவால் பறிமுதல் செய்யப்பட்டது.

amount seized election officers in madurai
amount seized election officers in madurai

By

Published : Mar 17, 2021, 3:43 PM IST

மதுரை: மகபூப்பாளையம் பகுதியில் தேர்தல் நிலைக் கண்காணிப்பு குழு சோதனையின் போது, உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட இரண்டு லட்சத்து 80ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மகபூப்பாளையம் பகுதியில் தேர்தல் கண்காணிப்புக் குழு அலுவலர் ராஜா தலைமையில் நடைபெற்ற வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, மதுரை எஸ்எஸ் காலனி பகுதியைச் சேர்ந்த உணவு பொருள்கள் மொத்த வியாபாரியான செல்வகுமார், பொருள்களை கடைகளுக்கு விநியோகம் செய்துவிட்டு திரும்பி சரக்கு வாகனத்தில் வந்துகொண்டிருந்தார்.

அப்போது தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நிறுத்தி சோதனை செய்ததில், அவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.2,80,000 ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதனை தேர்தல் நடத்தும் அலுவலர் கோட்டூர்சாமி, பணத்தை சீலிட்டு பணத்தை மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

தொடர்ந்து உரிய ஆவணங்களை சம்பந்தப்பட்ட நபர் தரும் பட்சத்தில் பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் என தேர்தல் நடத்தும் அலுவலர் கோட்டூர்சாமி தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details