கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகையை அடுத்த காண்டரப்பள்ளியை சேர்ந்த நாராயணசெட்டி (22), பெங்களூரு சின்னகுட்டா பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்து காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். அதுபோல் அதேப்பகுதியில் அஞ்செட்டியை அடுத்த பீரனஹள்ளியை சேர்ந்த வசந்த் (25) என்பவரும் காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.
இந்நிலையில் வசந்தும் நாராயணசெட்டி மகளும் காதலித்து வந்துள்ளனர். இதையறிந்த நாராயணசெட்டி பலமுறை வசந்தை கண்டித்துள்ளார். ஆனால் வசந்த் காதலை கைவிட மறுத்ததால் ஆத்திரமடைந்த நாராயணசெட்டி, தனது சொந்த கிராமமான காண்டரப்பள்ளிக்கு நேற்று முன்தினம் அதிகாலை வசந்தை லாவகமாக பேசி அழைத்துச் சென்று, உருட்டு கட்டை மற்றும் கல்லால் தாக்கி கொலை செய்தார்.