சென்னையின் அண்ணா சாலை தேனாம்பேட்டையில் தொடங்கி ஜெமினி மேம்பாலம் வரை இளைஞர்கள் சிலர் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனங்களை ஓட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதுபாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வாகன பதிவு எண்களை கண்டுபிடித்தனர்.
சென்னையில் பைக் வீலிங்... 2 பேர் கைது... முக்கிய குற்றவாளியை பிடிக்க ஹைதராபாத் விரைந்த தனிப்படை... - ஹைதராபாத்
சென்னை அண்ணா சாலையில் பைக் வீலீங் செய்த 2 இளைஞர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர். முக்கிய நபரை தேடி ஹைதராபாத் விரைந்துள்ளனர்.
அந்த எண் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த முகமது ஹாரிஸ்(19) மற்றும் முகமது சைபான்(19) என்வருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பைக் சாகசங்களில் ஈடுபட்டு சமூக வலைதளங்களில் பிரபலமான ஹைதராபாத்தை சேர்ந்த பினோஜ் என்பவர் சென்னை அண்ணா சாலை வழியாக நேற்று வருவதை அறிந்து அவரைப் பார்க்க சென்றதாகவும் அப்போதுதான் சாகசம் செய்ததாகவும் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் பினோஜை பிடிக்க தனிப்படை போலீசார் ஹைதராபாத் விரைந்துள்ளனர்.
இதையும் படிங்க:சென்னை சாலைகளில் தொடரும் பைக் சாகச அட்டூழியம்; பீதியில் பொதுமக்கள்