சென்னை: காசிமேட்டில் டிஜி காலனி பகுதியை சேர்ந்த இளைஞர் விக்னேஷ். இவர் தனது நண்பர்கள் ஆறு பேரோடு சேர்ந்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் படகுகள் கட்டும் இடம் அருகே குளித்துள்ளார். அப்போது விக்னேஷ் மட்டும் காணாமல் மாயமாகியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து விக்னேஷின் நண்பர்கள் அருகிலுள்ள மீனவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மீனவர்கள் அருகிலுள்ள காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கும், தீயணைப்புத்துறை வீரர்களுக்கும் தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்