கன்னியாகுமரி: தென்தாமரைகுளத்தில் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகிலுள்ள வில்லு பத்திரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி (33). கட்டட தொழிலாளியான இவருக்கும் செங்கோட்டையைச் சேர்ந்த திருமலைச்செல்வி (26) என்ற பெண்ணுக்கும் ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு திவ்யா (5), காவ்யா (4) எனும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொழில் காரணமாக இத்தம்பதி குழந்தைகளுடன் குமரி மாவட்டம் தென்தாமரைகுளம் வடக்கு பகுதியில் வாடகை வீடெடுத்து தங்கி இருந்தனர்.
வேலைக்கு செல்லாத கணவர்
பாண்டி அப்பகுதியில் கட்டட தொழிலாளியாக வேலை பார்த்துவந்தார். பாண்டி சரியாக வேலைக்கு செல்லாததால் குடும்பச் செலவுக்கு பணம் இல்லாமல் திருமலைச்செல்வி தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதை கணவரிடம் பலமுறை எடுத்துக் கூறியும் அவர் கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது.