கோயம்புத்தூர்: நீலிக்கோணாம் பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவரது மகள் லாவண்யா (28). இவர் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். லாவன்யாவுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெறவுள்ள நிலையில் நேற்று (ஜூலை.10) அவருக்கு கைகளில் அலர்ஜி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்காக அவர் ஐந்து அலர்ஜி மாத்திரைகளை எடுத்துக் கொண்டுள்ளார். இதனால் மயக்க நிலைக்குச் சென்ற அவரை அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.