தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

பட்டாக்கத்தியில் கேக் வெட்டிய இளைஞர்கள்: காவல்துறை விசாரணை! - Tamil news

சென்னையில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றுகூடி பட்டாக்கத்தியில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

பட்டாக்கத்தியில் கேக் வெட்டிய இளைஞர்கள்
பட்டாக்கத்தியில் கேக் வெட்டிய இளைஞர்கள்

By

Published : Jun 8, 2021, 4:43 PM IST

சென்னை: கண்ணகி நகரில் ஊரடங்கு உத்தரவை மீறி இளைஞர்கள் பட்டா கத்தியில் கேக் வேட்டி பிறந்தநாள் விழா கொண்டாடியுள்ள வீடியோ, வெளியாகி அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

கரோனா தொற்று பரவலைக் கட்டுபடுத்த தமிழ்நாடு அரசு அறிவித்த ஊரடங்கில், தற்போது சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னை, கண்ணகிநகர் பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று கூடி, இரண்டு பட்டாக் கத்திகளில் கேக் வெட்டி பிறந்தநாள் விழா ஒன்றைக் கொண்டாடியுள்ளனர்.

பட்டாக்கத்தியில் கேக் வெட்டிய இளைஞர்கள்

இந்த பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தை, சக நண்பர்கள் அவர்களது செல்போனில் வீடியோ காட்சிப்படுத்தி வெளியிட்ட நிலையில், தற்பொழுது சமூக வலைதளங்களில் வீடியோ வேகமாகப் பரவி வருகிறது. இதுகுறித்து கண்ணகிநகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தமிழன் பிரசன்னா மனைவி தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details