தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

இருசக்கர வாகனம் திருட்டு - சிசிடிவியில் சிக்கிய திருடர்கள்! - திருப்பத்தூர் செய்திகள்

வாணியம்பாடியில் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்டுள்ளது. வாகனத்தைத் திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் குறித்த கண்காணிப்புப் படக்கருவியின் பதிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

பைக் திருட்டு
bike theft

By

Published : Jan 28, 2021, 8:03 AM IST

திருப்பத்தூர்: பட்டப்பகலில் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தைத் திருடியவர்கள் குறித்த கண்காணிப்புப் படக்கருவியின் பதிவுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வாணியம்பாடி ஊசி தெருவில் வசித்து வரும் பொறியாளர் பஜல் மஹமூத், காலை தொழுகைக்காக இருசக்கர வாகனத்தில் மசூதிக்குச் சென்று, பின்னர் வீட்டின் வெளியே வாகனத்தை நிறுத்திவிட்டு, வீட்டிற்குள் சென்றார்.

வழக்கு

சிறிது நேரம் கழித்து, வெளியில் வந்து பார்த்த போது இருசக்கர வாகனம் மாயமாகி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனைத் தொடர்ந்து வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புப் படக்கருவியின் பதிவுகளைச் சோதனை செய்தபோது, அடையாளம் தெரியாத இருவர் வாகனத்தைத் திருடிச் செல்வது தெரியவந்தது.

சிசிடிவியில் சிக்கிய திருடர்கள்

உடனடியாக சம்பவம் குறித்து பஜல் மஹமூத், நகரக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் காவல் துறையினர், பதிவுசெய்யப்பட்ட காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details