சேலம்: ஆத்தூரை அடுத்த தம்மம்பட்டி பகுதியில் உள்ள காந்தி நகரைச் சேர்ந்தவர் தச்சு தொழிலாளி முருகன். இவரது மகன் விஜயராகவன் (23), தந்தையுடன் இணைந்து தொழிலில் ஈடுபட்டுவருகிறார்.
இவருக்கு திருமணம் செய்து வைக்க விரும்பிய பெற்றோர் அதற்கான ஏற்பாடுகளை செய்தனர். எனினும், தற்போது திருமணத்தில் விருப்பம் இல்லாத விஜயராகவன், திருமண ஏற்பாட்டை நிறுத்தும்படி பெற்றோரிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
அதற்கு அவரது தந்தை மறுப்பு தெரிவித்ததால், நேற்று (ஜூன்.29) காலை இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் விரக்தியும், ஆத்திரமும் அடைந்த விஜயராகவன் தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது.