ராமநாதபுரம்: கமுதி அருகே கோயில் உண்டியலைத் திருடிய மூன்று இளைஞர்களை 15 நாட்களுக்குப் பின்னர் காவல்துறையினர் கைது செய்தனர்.
கமுதியை அடுத்த புதுக்கோட்டை கிராமத்தின் அருகே வீரபத்திர சுவாமி கோயில், பகவதி பரஞ்சோதி அம்மன் கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில், கடந்த மே 9 ஆம் தேதி பூஜைக்குப் பின்னர் பூட்டிச் சென்றனர்.
அதன்பின்னர், கடந்த மே 16 ஆம் தேதி கோயிலுக்குச் சென்றவர்கள், அங்குள்ள உண்டியல் உடைக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, கமுதி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
கோயில் உண்டியலைத் திருடும் நபர்கள்! திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாகத் தேடிவந்தனர். இந்தநிலையில், 15 நாட்களுக்குப் பின்னர் கமுதியைச் சேர்ந்த மணி, கருப்பசாமி, கஜேந்திரன் ஆகிய மூன்று பேரை சிசிடிவி காட்சிகள் பதிவின் அடிப்படையில் பிடித்து விசாரித்ததில், மூவரும் திருடியதை ஒப்புக்கொண்டனர். இதைத்தொடர்ந்து மூவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஈவு இரக்கமின்றி நாயை கொலை செய்த நபர்' - வைரல் வீடியோ