தூத்துக்குடி கோவில்பிள்ளை விலைத் தெருவை சேர்ந்தவர் காளிராஜ். இவர் மீது ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி காவல் நிலையத்தில் திருட்டு, நகை பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. மேலும், அவர் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது! - தூத்துக்குடி குற்றவாளி கைது
ராமநாதபுரம்: தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தவர், ராமநாதபுரம் ஆட்சியரின் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
Thoothukudi criminal arrest
இந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்தி பரிந்துரையின் பேரில், ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் உத்தரவின் அடிப்படையில், காளிராஜ் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: போதை மருந்துக்காக மருந்துக்கடைகளில் திருடிய இளைஞர் கைது