திருப்பத்தூர்:ஆம்பூர் அடுத்த ரெட்டிதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன். இவருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை இவரது வீட்டின் வெளியே நிறுத்தி வைப்பது வழக்கமாக கொண்டுள்ளார்.
லேட் நைட்டில் சாவகாசமாக ஸ்கூட்டியை திருடிய நபர் - ஆம்பூரில் சிக்கிய சிசிடிவி காட்சிகள்! இந்நிலையில் நேற்று (மார்ச் 21) அதிகாலை அவ்வழியாக சென்ற இளைஞர் ஒருவர் ஜாகீர் உசேனின் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றுள்ளார்.
இது குறித்து ஜாகீர் உசேன் ஆம்பூர் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரின் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற இளைஞரை அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: விளக்கு ஒளியில் வரையப்பட்ட மணல் ஓவியம்.. இயற்கைக் காட்சிகள், புராதன சின்னங்கள்