தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர் கைது - தல்லாகுளம் காவல் நிலையத்தில்

17 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து வீடியோ எடுத்து வலைதளத்தில் பரப்புவதாக மிரட்டி 118 கிராம் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை பறித்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சிறுமி பாலியல் பாலாத்காரம்
சிறுமி பாலியல் பாலாத்காரம்

By

Published : Oct 17, 2022, 9:15 PM IST

மதுரை: ஐயர் பங்களாவைச் சேர்ந்த சந்துரு என்பவரும் முத்துப்பட்டி அருகிலுள்ள தனியார் பள்ளியில் பயின்று வரும் 17 வயது சிறுமிக்கும் காதல் மலர்ந்துள்ளது. காலப்போக்கில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, சந்துரு சிறுமியை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

அதனை வீடியோ காட்சிகளாகவும் எடுத்து வைத்துக் கொண்டு, அந்த வீடியோ காட்சிகளை வலைதளத்தில் பதிவிடுவதுடன் சிறுமியின் பெற்றோருக்கும் அனுப்பி விடுவதாக அச்சுறுத்தி, கொஞ்சம் கொஞ்சமாக 118 கிராம் தங்க நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை பெற்று மோசடி செய்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாக நேற்றும் (அக்.16) வழக்கம்போல் சிறுமியை மிரட்டி 50ஆயிரம் ரூபாய் பணம் கேட்டுள்ளார். பீரோவில் இருந்த 50 ஆயிரத்தை அந்தப் பெண் வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாமல் எடுத்துச் சென்று அந்த நபரிடம் கொடுத்துள்ளார். இந்நிலையில் பணம் காணாமல் போனதை கண்ட பெற்றோர் அதிர்ந்து போய் தங்கள் மகளையும் விசாரித்த போது சிறுமி நடந்தது அனைத்தையும் கூறியுள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், இது குறித்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட இளைஞர் சந்துருவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல் துறையினர், மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:ஆபாச வீடியோ காசியின் வெளிநாட்டு கூட்டாளி கைது.. குவைத்திலிருந்து திரும்பியதும் பிடித்த போலீசார்...

ABOUT THE AUTHOR

...view details