தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

'நான் பெரிய ரவுடி.. வீடும் ஸ்கூலும் எனக்குத்தான்..' தம்பதியை மிரட்டிய பாஜக நிர்வாகி சூர்யா சிவா

திருச்சியில் பா‌ஜ‌க மாநில நிர்வாகி சூர்யா, வாடகை ஒப்பந்தம் முடிந்த பின்னரும் பள்ளியைத் திரும்பத்தராமல், உரிமம் இன்றி தொடர்ந்து இயக்கி வரும் நிலையில் கட்டடத்தை திருப்பிக்கேட்ட தம்பதிக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

தம்பதியை மிரட்டிய பாஜக மாநில நிர்வாகி
தம்பதியை மிரட்டிய பாஜக மாநில நிர்வாகி

By

Published : Nov 2, 2022, 5:32 PM IST

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் வசித்து வருபவர், ஆர்த்தி. இவருக்கு திருச்சி சண்முகா நகர் 3ஆவது குறுக்கு சாலையில் சொந்தமாக ஏபிசி மாண்டிசரி பள்ளி மற்றும் வீடு இணைந்துள்ளது. இவர் தனது நண்பரின் உறவினரான அத்தினா சூர்யா என்பவரிடம் கடந்த 2019ஆம் ஆண்டு பள்ளியை மூன்று வருட கால வாடகைக்கு ஒப்பந்தத்தில் அளித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மே மாதத்துடன் பள்ளி நடத்துவதற்கான உரிமம் முடிவடைந்ததோடு அவர்களோடு போட்டிருந்த வாடகை ஒப்பந்தமும் முடிவடைந்தது.

எனவே, ஆர்த்தி அத்தினா சூர்யாவிடம் வாடகை ஒப்பந்தம் முடிவடைந்துவிட்டது, பள்ளி உரிமமும் முடிந்துவிட்டது பள்ளி கட்டடத்தையும் வீட்டையும் காலி செய்துகொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், அவர்கள் காலி செய்ய மறுப்புத்தெரிவித்துள்ளர்.

மேலும் உரிமம் முடிவடைந்த பள்ளியில் அட்மிஷனும் நடத்தியுள்ளனர். 6 மாத வாடகையும் தராமல், அத்தினா சூர்யாவின் கணவர் சூர்யா சிவா, பாஜகவின் ஓபிசி அணியின் மாநிலச்செயலாளர் பொறுப்பு வகிப்பதால், ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினரை தான் பாஜக பொறுப்பில் இருப்பதாகவும், தான் பெரிய ரவுடி என்றும், பள்ளி கட்டடத்தையும் வீட்டையும் காலி செய்ய முடியாது என்று கூறியதோடு, அவர்களைக்கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

'நான் பெரிய ரவுடி.. வீடும் ஸ்கூலும் எனக்குத்தான்..' தம்பதியை மிரட்டிய பாஜக நிர்வாகி சூர்யா சிவா

அதோடு சூர்யா சிவா ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை அபகரிக்க நினைப்பதோடு, அவற்றை தன்னுடைய பெயருக்கு ஐந்து வருட கால அவகாசத்தில் எழுதித்தர வேண்டும் என்று தொடர்ந்து மிரட்டுவதால், தன்னுடைய உயிருக்குப்பாதுகாப்பு வேண்டும் எனக்கூறி ஆர்த்தி என்று திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் சூர்யா சிவா மீது புகார் மனு அளித்துள்ளார்.

இதையும் படிங்க:'இப்படி ஒரு மகன் தேவையே இல்லை' - கூலிப்படை வைத்து மகனைக்கொன்ற பெற்றோர்

ABOUT THE AUTHOR

...view details