திருச்சி: மணப்பாறை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் வசிக்கும் செல்வம் என்பவரது மகள் அக்ஷயா(15), பத்தாம் வகுப்பு படித்து வந்தார். சிறுமி ஒழுங்காக படிக்காததை கவனித்த அவரது பெற்றோர். நேற்று (ஜூன் 30) மதியம் சிறுமியை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சிறுமி விஷ மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
பெற்றோர் கண்டித்ததால் உயிரை மாய்த்துக் கொண்ட பள்ளி மாணவி - Suicide death
பெற்றோர் கண்டித்ததால் விஷம் அருந்திய பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி இன்று (ஜூலை.1) மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், சிறுமியை மீட்டு மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை மேற்கொண்டு வந்த சிறுமி அக்ஷயா, இன்று (ஜூலை.1) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மணப்பாறை காவல்துறையினர் அக்ஷயா மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெற்றோர் கண்டித்ததற்காக சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சிறுமியின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.