தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே உள்ள சில்லாங்குளத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்த மாணவி நேற்று இரவு பள்ளி கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மணியாச்சி ரூரல் டிஎஸ்பி லோகேஸ்வரன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.