தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

சாத்தூர் வெடிவிபத்து - உயிரிழப்பு 23ஆக உயர்வு - virudhunagar news

சாத்தூர் பட்டாசு ஆலையில் பிப்ரவரி 12ஆம் தேதி பெரும் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 22 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் ஒருவர் இன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

sattur crackers factory burst
sattur crackers factory burst

By

Published : Feb 25, 2021, 7:30 PM IST

விருதுநகர்: சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சன்குளத்தில் பிப்ரவரி 12ஆம் தேதி நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த மார்க்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த காளியப்பன் (32) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தப் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஏற்கனவே 22 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details