தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

சேலம் என்ஐஏ சோதனையில் பிரபாகரன், வீரப்பன் புகைப்படங்களை எடுத்துச்சென்ற அலுவலர்கள் - யூடுயூப் பார்த்து துப்பாக்கி செய்ய

சேலத்தில் யூ-ட்யூப் பார்த்து துப்பாக்கி செய்ய ஆன்லைனில் பொருட்கள் வாங்கிய இளைஞர்கள் வீட்டில் என்ஐஏ அலுவலர்கள் சோதனை நடத்தினர். பின் வீட்டில் இருந்த பிரபாகரன், வீரப்பன் படங்கள், புத்தகங்களை அலுவலர்கள் எடுத்துச்சென்றனர்.

சேலம் என்ஐஏ சோதனையில் அதிகாரிகள் பிரபாகரன், வீரப்பன் புகைப்படங்களை எடுத்துச் சென்றனர்...
சேலம் என்ஐஏ சோதனையில் அதிகாரிகள் பிரபாகரன், வீரப்பன் புகைப்படங்களை எடுத்துச் சென்றனர்...

By

Published : Oct 7, 2022, 5:56 PM IST

சேலம்: மாநகராட்சிப் பகுதியில் உள்ள செவ்வாய்பேட்டை பகுதியைச்சேர்ந்தவர், சஞ்சய் பிரகாஷ். இவரும் சேலம் எருமபாளையத்தைச்சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி என்பவரும் சேலம் அருகே உள்ள கோரிமேடு பகுதியில் இருக்கும் விநாயகம்பட்டி என்ற பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து, தங்கி துப்பாக்கி தயாரித்தனர்.

இதனையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் ஏற்கெனவே என்ஐஏ அலுவலர்கள் விசாரணை செய்திருந்தனர். இந்த நிலையில் இன்று காலை விநாயகம்பட்டிக்கு என்ஐஏ அலுவலர்கள் குழுவினர் வந்தனர். பிறகு கைது செய்யப்பட்ட இருவர் தங்கியிருந்த அறையைத் திறந்து பார்த்தனர். அங்கு இருந்த புத்தகங்களைப் பறிமுதல் செய்தனர்.

மேலும் அங்கு, சந்தனக்கடத்தல் வீரப்பன் மற்றும் விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் ஆகிய இருவரின் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. இதனையும் அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இது தவிர யூ-ட்யூப்பை பார்த்து துப்பாக்கி செய்ய இருவரும், ஆன்லைன் மூலம் பல்வேறு பொருட்களை வாங்கி இருந்தனர். இதற்கான பில்கள் அறையில் இருந்தது. அவற்றையும் என்ஐஏ அலுவலர்கள் பறிமுதல் செய்து சென்னைக்கு எடுத்துச்சென்றனர். இன்று அதிகாலை 5 மணியில் தொடங்கிய இந்த சோதனை பிற்பகல் 3 மணி அளவில் முடிவடைந்தது.

இதையும் படிங்க:பனங்காட்டு படை கட்சியின் நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜா கைது

ABOUT THE AUTHOR

...view details