தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

ஆரணியில் பட்டப்பகலில் செல்போன் கடையில் திருட்டு! - சத்தியமூர்த்தி சாலை

ஆரணியில் செல்போன் கடைக்கு வந்த நபர் சார்ஜிங்கில் இருந்த செல்போனை திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஆரணியில் பட்டப்பகலில் செல்போன் கடையில் திருட்டு
ஆரணியில் பட்டப்பகலில் செல்போன் கடையில் திருட்டு

By

Published : Oct 13, 2022, 1:50 PM IST

திருவண்ணாமலை:ஆரணி டவுன் முக்கிய வீதியான சத்தியமூர்த்தி சாலையில் செல்போன் விற்பனை மற்றும் ரீசார்ஜ் செய்யும் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையில் ரீ சார்ஜ் செய்வதற்காக ஒருவர் வந்திருந்தார். அப்போது கடையின் உரிமையாளர் உள்ளே சென்று இருந்தார். அப்போது கடையில் மேலும் இரண்டு நபர்கள் அமர்ந்திருந்தனர்.

செல்போன் கடையில் சார்ஜ் செய்வதற்காக வைத்திருந்ததை நோட்டமிட்ட அந்த நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜிங்கில் இருந்த செல்போனை திருடிவிட்டு, செல்போனில் பேசுவது போல் நடித்துக்கொண்டே அந்த இரு நபர்களைக் கடந்து, செல்போனை திருடிக்கொண்டு வெளியே சென்று விட்டார்.

சிசிடிவியில் பதிவாகியிருந்த இந்த காட்சிகளைக் கண்ட கடை உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக ஆரணி நகர காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆரணி செல்போன் கடையில் பட்டப்பகலில் ஒருநபர் செல்போன் திருடிய சிசிவிடி கேமரா காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஆரணியில் பட்டப்பகலில் செல்போன் கடையில் திருட்டு

இதையும் படிங்க:கோவில்பட்டி அருகே கபடி போட்டி நடத்தியதில் தகராறு; நான்கு பேர் கைது...

ABOUT THE AUTHOR

...view details