பெரம்பலூர்: தண்ணீர் லாரி மோதி விவசாயி உயிரழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரைப் பறிக்கும் தண்ணீர் லாரிகள் - சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்! - சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
பெரம்பலூர் அருகே கிரஷர் நிறுவனத்திற்கு சொந்தமான தண்ணீர் டேங்கர் லாரி மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்ததால், ஆவேசமடைந்த கிராம பொதுமக்கள் பெரம்பலூர்- மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் அருகே உள்ள கே.எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். விவசாயியான இவர் கே.எறையூர் கிராமத்திலிருந்து பெரம்பலூர் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.
அப்போது முன்னாள் சென்ற தனியார் கிரஷர் நிறுவனத்திற்கு சொந்தமான தண்ணீர் டேங்கர் லாரியை முந்த முயன்ற போது, சாலையோர பள்ளத்தில் நிலை தடுமாறி, சாலையில் இருசக்கர வாகனத்துடன், லாரியின் முன் பகுதியில் விழுந்த ராமச்சந்திரன் மீது லாரியின் இரண்டு சக்கரங்களும் ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த கே.எறையூர் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ராமச்சந்திரன் உயிரிழந்ததை கண்டித்து பெரம்பலூர்- மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் கே.எறையூர் பேருந்து நிறுத்தம் அருகே திடீர் சாலை மறியலில் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் வாகனங்கள் அணிவகுத்து நிற்க தொடங்கின.