தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

வாடகை பிரச்சைனை: சூளைமேட்டில் துணிகடைக்கு தீ வைப்பு - கிரைம் செய்தி

சென்னை சூளைமேடு அருகே வாடகை பிரச்சனையால் துணிகடைக்கு தீ வைத்த கடை உரிமையாளரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

வாடகை பிரச்சைனை
வாடகை பிரச்சைனை

By

Published : Mar 8, 2021, 3:03 PM IST

சென்னை: சென்னை சூளைமேடு நீலகண்டன் தெருவைச் சேர்ந்த பெட்ரம் ஸ்வாரிஸ்(53), சூளைமேடு சவுராஷ்ட்ரா நகரில் துணிகடை ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த ஜனவரி மாதம் 3ஆம் தேதி கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர், மறுநாள் 4ம் தேதி வழக்கம்போல கடைக்கு சென்றுள்ளார்.

அங்கு கடை எரிந்து கிட்டத்தட்ட 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் சேதமடைந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். ஸ்வாரிஸ், சந்தேகதின் பேரில் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிபடையில், காவல்துறையினர் சம்பவ இடத்தில் வைக்கப்பட்டியிருந்த சிசிடிவி கேமரவிவல் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், கடையின் உரிமையாளாரான நிஜாம் உட்பட 7 பேர் கொண்ட கும்பல் கடைக்கு தீ வைத்திருப்பது தெரியவந்தது.

இந்த தீ வைப்பு சம்பவம் தொடர்பாக, சூளைமேடு பகுதியைச் சேர்ந்த ராமராஜ் (31), ஆனந்தன்(30), பாலாஜி(33), சந்துரு(37), சந்திரகுமார்(25), ராஜேஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், நிஜாமின் நண்பரான ராஜேஷ் ஓட்டல் நடத்த இடம் கேட்டு வந்ததாகவும், கடையை காலிசெய்ய தொடர்ந்து ஸ்வாரிஸ் தாமதம் செய்துவந்ததால் ஆத்திரமுற்று நிஜாமுடன் சேர்ந்து கடைக்கு தீ வைத்ததாக ஒப்புக்கொண்டனர்.

மேலும், தலைமறைவாக இருந்து வரும் கடையின் உரிமையாளரான நிஜாம் மற்றும் ராம்கி ஆகியோரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதனையும் படிங்க: மூன்றாம் வகுப்பு மாணவியை பாலியல் தொல்லைக்கு உட்படுத்திய எட்டாம் வகுப்பு மாணவன்

ABOUT THE AUTHOR

...view details