தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

பள்ளி கழிவறையில் மாணவி வன்புணர்வு! - புனோ மாணவி வன்புணர்வு

பள்ளி கழிவறையில் 11 வயது மாணவியை பாலியல் வன்புணர் செய்த பள்ளி காவலாளி போலீசாரால் கைதுசெய்யப்பட்டார்.

Pune Minor
Pune Minor

By

Published : Mar 25, 2022, 6:28 PM IST

Updated : Mar 25, 2022, 7:08 PM IST

புனே : நெஞ்சை படபடக்கச் செய்யும் இந்தக் காரியம் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள பிரபலமான பள்ளியொன்றில் நிகழ்ந்துள்ளது. இந்தப் படுபாதகச் செயலில் ஈடுபட்ட காவலாளி போலீசாரால் கைதுசெய்யப்பட்டார்.

புனேவில் உள்ள பிரபலமான பள்ளியில் காவலாளியாக இருப்பவர் மன்கேஷ். இவர் வியாழக்கிழமை (மார்ச் 25) பள்ளியில் பயிலும் 11 வயது மாணவியிடம் நைசாக பேச்சுக் கொடுத்து கழிவறைக்கு கடத்திச் சென்றுள்ளார்.

இந்நிலையில் அங்கு வைத்து மாணவியிடம் தவறாக நடந்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி பெற்றோரிடம் தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சியைடைந்த அவர்கள் சிவாஜிநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து காவலாளி மன்கேஷை கைது செய்தனர்.

அவர் மீது பாலியல் வன்புணர்வு மற்றும் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கூறுகையில், “பாதிக்கப்பட்ட மாணவி ஒரு மைனர். இந்த வழக்கில் மன்கேஷ் மீது பாலியல் வன்புணர்வு மற்றும் போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வழக்கில் துரித விசாரணை நடைபெற்றுவருகிறது” என்றார்.

இதையும் படிங்க : வேலூரில் மருத்துவ மாணவி கூட்டுப்பாலியல் வன்புணர்வு

Last Updated : Mar 25, 2022, 7:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details