அரியலூர்: அரியலூரைச் சேர்ந்தவர் விஜயகுமார். கடந்த மாதம் இவரை செல்போனில் தொடர்புக் கொண்டு பேசிய நபர்கள், உங்களுக்கு பில்லி, சூனியம் இருப்பதாகவும், கொல்லிமலைச் சென்று பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் அதற்கான தொகையை தனது வங்கிக் கணக்கில் செலுத்துமாறு கூறியுள்ளார்.
இதனை நம்பிய விஜயகுமார் வங்கி மூலமாகவும், நேரடியாகவும் ரூ.12,00,000கொடுத்துள்ளார். பின்னர், தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விஜயகுமார், இது குறித்து அரியலூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த 4ஆம் தேதி புகார் அளித்தார்.
அதன் பேரில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில், திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த சத்யா மகன்கள் வல்லராஜ் (25), கிருஷ்ணன்(எ) தர்மராஜ் (24), சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மாடசாமி மகன் சனியன்(எ)குமார் (39) ஆகிய 3 பேரும் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.