பெரம்பலூர் 4 ரோடு பகுதி அருகே எலக்ட்ரிக் கடை வைத்து நடத்தி வருகிறார், ஆறுமுகம். இவர் நேற்றிரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் எலக்ட்ரிக் கடை அருகே இருந்த டீக்கடையை இன்று (பிப்.27) அதிகாலை 5 மணி அளவில் திறக்க வந்துபோது, டீக்கடை மற்றும் அருகே இருந்த எலக்ட்ரிக்கல் கடை ஷட்டர் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது குறித்து உரிமையாளர் ஆறுமுகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர் வந்து கடையை பார்த்தபோது, கல்லாபெட்டி உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 5000 ரூபாய் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து பெரம்பலூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில், அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது எலக்ட்ரிக்கல் கடையில் வைத்திருந்த சிசிடிவி காட்சி மூலம் திருடனை அடையாளம் கண்டனர். பின் அதை அனைத்து காவலர்களுக்கும் செல்போன் மூலம் அனுப்பி வைத்தனர்.