தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

சாலையில் நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து: ஒருவர் மரணம் - மயிலாடுதுறை குற்றச் செய்திகள்

தரங்கம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்றுகொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் இரண்டும் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.

லாரி மோதி விபத்து
லாரி மோதி விபத்து

By

Published : Sep 8, 2021, 1:22 PM IST

மயிலாடுதுறை:வேலூர் மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் மும்மூர்த்தி (31). இவர் சென்னையிலிருந்து காரைக்காலுக்கு ஈச்சர் லாரியில் தண்ணீர் பாட்டில் ஏற்றி வந்துகொண்டிருந்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே தலச்சங்காடு தேசிய நெடுஞ்சாலை திருப்பத்தில் நிறுத்திவிட்டு லாரியை விட்டு கீழே இறங்கி நின்றிருக்கிறார். அப்போது, காரைக்கால் கோட்டுச்சேரியைச் சேர்ந்த சங்கர் மகன் பழனி (27) என்பவர் டிப்பர் லாரியில் ஜல்லிக்கற்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக ஓட்டிவந்தார்.

அப்போது, டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நின்றுகொண்டிருந்த ஈச்சர் லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இரண்டு லாரிகளும் கவிழ்ந்தன. இதில் லாரி அருகில் நின்றிருந்த மும்மூர்த்தி லாரிக்கிடையில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதில் பழனிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த செம்பனார்கோவில் காவல் துறையினர், விபத்தில் உயிரிழந்த மும்மூர்த்தியின் உடலை ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பிவைத்தனர்.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். விபத்தில் காயமடைந்த பழனி மயிலாடுதுறை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

இதையும் படிங்க:திருச்சி அருகே மணல் திருட்டு: ஜேசிபி, டிப்பர் லாரி பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details