தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

அரசு செவிலியரிடம் தவறாக நடக்க முயன்ற வடமாநிலத்தவர் கைது

கன்னியாகுமரி: அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியரிடம் தவறாக நடக்க முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்.

அரசு செவிலியரிடம் தவறாக நடக்க முயன்ற வடமாநிலத்தவர் கைது
அரசு செவிலியரிடம் தவறாக நடக்க முயன்ற வடமாநிலத்தவர் கைது

By

Published : Mar 22, 2021, 12:41 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் ஒருவர் செவிலியராக பணியாற்றிவருகிறார். அப்போது, அங்கு வந்த ஒரு நபர் அங்கு இருந்த செவிலியரிடம் அவரது பணியை செய்யவிடாமல் தடுத்தும் அவரை தவறான எண்ணத்துடனும் நெருங்கி தவறாக நடக்க முயற்சித்துள்ளார். உடனே, பெண் செவிலியர் சத்தம் போடவே அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.


தகவலறிந்த காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் குளச்சல் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் சாஸ்திரி தலைமையில் தனிப்படைகள் அமைத்து கண்டுபிடிக்க உத்தரவிட்டார். அதனடிப்படையில், ’’புதுக்கடை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அனில் குமார், முத்தையன் ஆகியோரும், உதவி காவல் கண்காணிப்பாளர் அவர்களின் விரைவுப்படையும் , தனிப்பிரிவு காவல் துறையினர், தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அங்குள்ள சிசி டிவி காட்சிகளை சோதனை செய்தும் குற்றவாளியை மூன்றரை மணி நேரத்தில் கைது செய்தனர். விசாரணையில், அந்த நபர் உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த லிலு (50) என்பது தெரியவந்தது. உடனே, அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். விரைவாக செயல்பட்டு குற்றவாளியை பிடித்த காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி விவகாரம் - அரசாணையை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

ABOUT THE AUTHOR

...view details