தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

குவைத் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட முத்துகுமரன்...விசாரணைக்கு பின் உடலை கொண்டுவர நடவடிக்கை

குவைத் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட முத்துகுமரன் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் அவரது உடலை தாயகம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை தெரிவித்துள்ளது.

குவைத் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட முத்துகுமரன்...விசாரணை அறிக்கைக்கு பின் உடலை கொண்டுவர நடவடிக்கை
குவைத் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட முத்துகுமரன்...விசாரணை அறிக்கைக்கு பின் உடலை கொண்டுவர நடவடிக்கை

By

Published : Sep 14, 2022, 2:22 PM IST

சென்னை:திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அடுத்த லெட்சுமாங்குடியை சேர்ந்தவர் முத்துக்குமரன் (40). இவரது மனைவி வித்யா. இவர்களுக்கு நிதிஷ்குமார், ரிஷிகுமார் என இரு மகன்கள். சொந்தமாக காய்கறி கடை நடத்தி வந்த முத்துக்குமரன், போதிய வருமானம் இல்லாததால் வெளி நாட்டிற்கு வேலைக்கு செல்ல முடிவெடுத்தார்.

குவைத் நாட்டிற்கு செப் 3ஆம் தேதி வேலைக்கு சென்ற முத்துகுமரனுக்கு உரிய பணி ஒதுக்காமல் ஒட்டகம் மேய்க்க வற்புத்தியதாக கூறப்படுகிறது. அவர் தாயகம் திரும்ப முயற்சி செய்துகொண்டிருந்த வேலையில் 7ஆம் தேதி அவர் சுட்டுகொல்லப்பட்டுள்ளதாக அவரின் குடும்பத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

குவைத் நாட்டை சேர்ந்தவர் முத்துகுமரனை சுட்டுகொன்றதாக முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது. அந்நாட்டின் விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் அவர் உடலை தாயகம் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இத்துறையில் பதிவு செய்து பணிக்கு சென்றாரா என ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:தேனியில் சமூக ஆர்வல சகோதரிகளை கைது செய்யக்கோரி பாஜகவினர் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details