சென்னை அமைந்தகரை வெள்ளாளர் தெருவை சேர்ந்த கார் ஓட்டுநர் கமலக்கண்ணன். இவரது மனைவி ஜெயந்தி (44), மகள் மோனிகா (23) இருவரும் இன்று காலை வீட்டில் இருந்த போது, அடையாளம் தெரியாத இரண்டு பேர் வீட்டிற்குள் புகுந்து இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த தாய், மகளை மீட்டு கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் பலனின்றி ஜெயந்தி உயிரிழந்தார். மோனிகா காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
தாய் வெட்டிக்கொலை; மகள் படுகாயம்! தலைநகரில் ரவுடிகள் வெறிச்செயல்! - பெண் வெட்டிக்கொலை
சென்னை: வீடு புகுந்து ரவுடிகள் சரமாரியாக வெட்டியதில் தாய் கொல்லப்பட்டு, மகள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
murder
இது தொடர்பாக அமைந்தகரை காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடியவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த தாய் மற்றும் மகளை ரவுடிகள் வெட்டிய நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மகன் கைது!