தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

தாய், மகள் மாயம்....பேயோட்டுபவர் மீது மகன் சந்தேகம் - பேயோட்டுபவருக்கு தொடர்பு

தனது தாய், சகோதரி காணாமல் போனதில் பேயோட்டுபவருக்குத் தொடர்பு இருப்பதாக மகன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

தாய், மகள் மாயம்....பேயோட்டுபவர் மீது மகன் சந்தேகம்
தாய், மகள் மாயம்....பேயோட்டுபவர் மீது மகன் சந்தேகம்

By

Published : Aug 25, 2022, 8:34 PM IST

தும்கா (ஜார்க்கண்ட் ): துதானி பகுதியில் வசிக்கும் சச்சின் குமார் குப்தா, தனது தாய் சஞ்சு தேவி மற்றும் 19 வயது சகோதரி காஷிஷ் பிரியா ஆகியோரை ஆகஸ்ட் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை கடைசியாக பார்த்ததாகவும், நான்கு நாட்களாக இருவரையும் காணவில்லை எனவும் அருகிலுள்ள காவல் நிலையத்தில் கூறியுள்ளார்.

இந்த விஷயத்தில் ஓஜா முக்தார் ஹுசைன் என்ற பேயோட்டுபவர் மீது சந்தேகம் இருப்பதாக சச்சின் குற்றம் சாட்டியுள்ளார். "குடும்பக்குழப்பத்தின்போது ஓஜா எங்கள் வீட்டிற்குச்சென்று அவர்களைச் சமாதானப்படுத்துவார். என் அம்மாவும் சகோதரியும் காணாமல் போன அன்று, நான் ஓஜாவை அவரது போனுக்கு அழைத்தேன். ஆனால் அவர் என்னிடம் தெளிவற்ற மொழியில் பேசினார். பின்னர் அவரது தொலைபேசியை அணைத்துவிட்டார்" என்றார்.

என் அம்மாவுடன் காணாமல் போனதால் எனது சகோதரியின் தொலைபேசியும் அணைக்கப்பட்டுள்ளது என்று சச்சின் கூறினார். இதுகுறித்து போலீசிலும் புகார் அளித்துள்ளார். தும்கா எஸ்டிபிஓ நூர் முஸ்தபா, காஷிஷ் பிரியா மற்றும் ஓஜாவின் மொபைல்களின் அழைப்பு விவரங்களைப் பிரித்தெடுக்குமாறு காவல்துறையின் தொழில்நுட்பப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார். இருவரும் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்று SDPO குடும்பத்தினருக்கு உறுதியளித்தார். வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இதையும் படிங்க:பாஜக நிர்வாகி சோனாலியின் உடலில் கண்டுபிடிக்கப்பட்ட காயங்கள் - இருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details