தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

பணப் பையை பிளேடால் அறுத்து கொள்ளை - காவல்துறையினர் விசாரணை - பெண்ணிடம் பணம் திருட்டு

ராமநாதபுரம்: கமுதி அருகே பேருந்தில் அஞ்சல் நிலைய அலுவலரின் மனைவியிடம் ஒரு லட்சத்து 10 ஆயிரத்தை திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபர் குறித்து காவல்துறை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

money looted in lady bag near kamuthi
பையில் வைத்திருந்த பணத்தை பிளேடால் அறுத்து கொள்ளை

By

Published : Apr 18, 2021, 7:29 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பெருநாழி அருகே கட்லாங்குலத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவர் அதே ஊரில் அஞ்சல் நிலைய அலுவலராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி திருநாவுக்கரசி . இவர் கட்லாங்குளத்திலிருந்து நடந்து வந்து வேப்பங்குளத்தில் பஸ் ஏறி பெருநாழியில் உள்ள வங்கி சென்றுள்ளார்.

அப்போது அவரது பையில் வங்கியில் செலுத்துவதற்காக வைத்திருந்த ஒரு லட்சத்து 10 ஆயிரம் பணத்தை அடையாளம் தெரியாத நபர் பிளேடால் கிழித்து திருடிச் சென்றுள்ளனர்.

பெருநாழி பேருந்து நிலையத்தில் வந்து பார்த்த போது பணம் திருடு போனது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து திருநாவுக்கரசி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பொருள்கள் வாங்குவதுபோல நடித்து ரூ.3 லட்சம் திருடிய பெண்

ABOUT THE AUTHOR

...view details