தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

ஊராட்சிமன்றத் தலைவர்கள் கூட்டமைப்பின் பெயரில் பண மோசடி: டிஜிபி அலுவலகத்தில் புகார் - பணம் மோசடி

ஊராட்சிமன்றத் தலைவர்கள் கூட்டமைப்பின் பெயரில் இரண்டு கோடி ரூபாய் வரை சந்தா வசூல் செய்து மோசடியில் ஈடுபட்ட நிர்வாகிகள் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்களைச் சந்தித்த ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பினர்
செய்தியாளர்களைச் சந்தித்த ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பினர்

By

Published : Sep 3, 2021, 10:48 AM IST

தர்மபுரி மாவட்டம், ஊராட்சிமன்றத் தலைவர்கள் கூட்டமைப்பின் உறுப்பினரான கலைச்செல்வன், டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், ”தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி மன்றத் தலைவர்கள்ளின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது.

இந்தக் கூட்டமைப்பின் தலைவராக முனியான்டி என்பவரும், மாநில ஒருங்கிணைப்பாளராக ராஜன் என்பவரும் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் எந்த ஊராட்சியிலும் தலைவராக இல்லை.

ஊராட்சிமன்றத் தலைவர்கள் கூட்டமைப்பில் மட்டும் பொறுப்பில் இருந்து கொண்டு, ஊராட்சிமன்றத் தலைவர்களிடம் மாதம் ஆயிரம் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை சந்தா பணம் பெற்று வருகின்றனர்.

பல லட்சம் ரூபாய் மோசடி

தமிழ்நாடு முழுவதும் ஏழாயிரம் ஊராட்சிமன்றத் தலைவர்களிடம் இருந்து இதுவரை சுமார் இரண்டு கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளனர். அந்தப் பணத்தை முறைப்படி செலவு செய்யாமல் மோசடி செய்து வருகின்றனர்.

செய்தியாளர்களை சந்தித்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பினர்

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகார் மனுவை பெற்றுக் கொண்ட அலுவலர்கள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பிறப்பு, இறப்பு சான்றிதழ் குறித்து புகார் தெரிவிக்க உதவி எண்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details