மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சின்னங்குடி மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யராஜ். இவர், மீன்பிடிக்க கடலுக்கு சென்றிருந்த நிலையில், அவரது மனைவி செந்தமிழ்ச்செல்வி (25) நேற்றிரவு (மார்ச் 8) வீட்டின் பின்புறம் கிரைண்டரில் மாவு அரைத்து கொண்டிருந்துள்ளார்.
அப்போது, பின்னாலிருந்து வந்த அடையாளம் தெரியாத நபர், செந்தமிழ்செல்வியை தாக்கிவிட்டு அவர் அணிந்திருந்த ஆறு பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளார்.