தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

விசாரணை கைதி மரணம்...போலீசார் மீது குடும்பத்தினர் குற்றச்சாட்டு

அயனாவத்தை சேர்ந்த ஆகாஷ் என்பவரை ஓட்டேரி காவல் நிலைய போலீசார் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் பலத்த காயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

விசாரணை கைதி மரணம்...போலீசார் மீது குடும்பத்தினர் குற்றச்சாட்டு
விசாரணை கைதி மரணம்...போலீசார் மீது குடும்பத்தினர் குற்றச்சாட்டு

By

Published : Sep 29, 2022, 12:13 PM IST

சென்னை: அயனாவரம் ஏராங்கிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ்(20). சி கேட்டகரி ரவுடியான ஆகாஷ் மீது கொள்ளை, கொலை மிரட்டல் உள்ளிட்ட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

கடந்த 20 ஆம் தேதி பெரம்பூரை சேர்ந்த ரயில்வே ஊழியர் பாலகிருஷ்ணமூர்த்தி என்பவரது கார் கண்ணாடியை உடைத்து விட்டதாக அளித்த புகாரில் ஓட்டேரி போலீஸார் கடந்த 21ஆம் தேதி ரவுடி ஆகாஷை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதாக தெரிகிறது.

அப்போது ஆகாஷ் மதுபோதையில் மயக்க நிலையில் இருப்பதாக கூறி அவரது அக்காவை வரவழைத்த போலீஸார், பின்னர் ஆகாஷை அவருடன் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மயக்க நிலையில் சுயநினைவின்றி இருந்த ஆகாஷை அவரது குடும்பத்தினர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்நிலையில் சுய நினைவின்றி சிகிச்சை பெற்று வந்த ஆகாஷ் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆகாஷை போலீஸார் காவல்நிலையத்தில் வைத்து தாக்கியதால் மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்ததாக அவரது குடும்பத்தார் குற்றம்சாட்டி வருகின்றனர்.

உயிரிழந்த ஆகாஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. விசாரணை கைதி ஆகாஷ் காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் தாக்கியதால் உயிரிழந்தாரா என்பது குறித்து துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர் எனக்கூறி 10 லட்சம் மோசடி செய்ய முயன்றவர் கைது

ABOUT THE AUTHOR

...view details