டோய்வாலா:உத்தரகாண்ட் மாநிலம் டோய்வாலாவில் உள்ள ராணிபோகாரியில் மகேஷ் என்பவர் தனது குடும்பத்தை சேர்ந்த 5 பேரை கொலை செய்துள்ளதாக அப்பகுதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சம்பவயிடத்திற்கு விரைந்த போலீசார் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தாய், மனைவி, குழந்தைகளை கொலை செய்த நபர் கைது - கொலை செய்யப்பட்டது
உத்தரகாண்ட் மாநிலத்தில் தாய், மனைவி உட்பட மூன்று குழந்தைகளை கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
உத்தரகாண்டில் தனது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரைக் கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டார்
இதுகுறித்து போலீசார் தரப்பில், இந்த சம்பவம் நேற்று முன்தினம் நள்ளிரவு ஏற்பட்டுள்ளது. மகேஷ் தனது குடுபத்தாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை செய்துள்ளார். அவருக்கு நான்கு குழந்தைகள் இருந்த நிலையில் நான்காவது குழந்தை அவரது உறவினர் வீட்டில் தங்கியிருந்ததால் உயிர் தப்பியது. அவரை கைது செய்து விசாரித்து வருகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:மனைவி வற்புறுத்தி மாட்டுக்கறி கொடுத்ததால் கணவர் தற்கொலை